மேகம் என்னும்
கருங்கூந்தலை அள்ளி முடித்து ,
மின்னல் போன்ற
உன் பார்வை என் மேல் பாய ,
வானவில் என்னும்
உடையை தரித்து ,
மழை நீராய்
என் உயிரை அடித்து சென்று விட்டாயே !

நீ உன்னை மட்டும் நேசிக்கதே
இருக்கும் போதே செத்து கொண்டிருப்பாய்..........
பிறரையும் நேசித்து பார் இறந்தாலும்
வாழ்ந்து கொண்டிருப்பாய்அவர்கள் இதயத்தில்.......
"வண்ணங்கள் தேவையில்லை தோழி....
உன் புன்னைகை கொடு போதும்,என் பூக்களும் புன்னைகைக்கும்...
வசந்த காலம் தேவையில்லை தோழி....
உன் விழி பார்வை ஒன்றே போதும்,
கவிதைகள் வேண்டாம் பெண்ணே....
உன் ஒரு வரி வார்த்தைகள் போதும்,
உன் அருகாமை ஒன்று போதும்,
நம் நினைவில் நின்ற நினைவுகளை கதையாக எழுதினேன்
கவிஞன் கூட இப்படி தான் கவிதை எழுதிருபனோ !..- விமலா
முதல் உணவாக தன் இரத்தத்தையே கொடுத்தவள்......
மரபு சூட்டின் இடையில் தூங்க இடம் கொடுத்தவள்.....
பொன் பாதம் தரையில் ஊன்றி நடக்க கற்று கொடுத்தவள்......
முதல் வார்த்தை பேச கற்று கொடுத்தவள்......
இந்த தியாகியின் பெயர் தான் அம்மா
நிஜங்களில் வரும் நிஜங்களை விரும்பி பார்....
வெற்றி உன்னை விரும்பி உன் பின்னே வரும்...."