பிரிவும் நண்பனும்

பிரிவின் போது தான் மனம்
அதிகமாக நண்பனை நாடுகின்றது,
தோழனை தேடுகின்றது,
உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
மாமா, மச்சான் என்று அழைப்பதும்
மனத்தில் உள்ள பாரத்தை இறக்கி வைப்பதும்
அவனிடமே,,, 
அவனே என் உயிர்,
அவனே என் அடையாளம்,
அவனே என் சந்தோசம்,
பிரிவே போய்விடு, என் நண்பன் என்றும் என் உள்ளத்தில் தான் வசிக்கிறான்,
அவனை காணும் நாள் உனக்கு தான் பிரிவு ஏற்படும் என்னிடமிருந்து.....



நீர்ச்சோறும் அமிர்தம் தான்

அறுசுவை உணவு தேவைஇல்லை,
வெறும் நீர்ச்சோறும் அமிர்தம் தான்
அவளின் கையால் அள்ளிக்கொடுத்தால்....

அதுவே அவளின் கைப்பக்குவம்,
அதுவே பாசத்திற்கான தனித்துவம்,

அதுவே அம்மாவின் சாப்பாடு...

அறுசுவை உணவு தேவைஇல்லை,
வெறும் நீர்ச்சோறும் அமிர்தம் தான்....

அன்றொரு நாள்



நானும் என் நண்பனும் ஒரே (கல்லூரிச்)சாலையில் சென்றோம்,
நாங்கள் இனி பிரிய மாட்டோம் என சபதம் ஏற்றோம்,

ஆனால்,
இன்றோ சாலை பிரிகின்றது, 
இது தான் யதார்த்தம்,

மீண்டும் சந்திக்கையில்;
உதட்டில் புன்னகை தவழும்,
மனத்தில் மகிழ்ச்சி  நிலவும்,
முகத்தில் மலர்ச்சி  மலரும்,

காத்திருக்கிறேன்,
அன்றொரு நாள் என்று வரும்?

அவள்

அவள்

அன்பை உருவாக்கியவள் அவளே,
அன்பை உணரச்செய்தவள் அவளே,

நீ இன்றி நான் இல்லை, என்பவள் இல்லை அவள்,
நான் வாழ்வதே உனக்காக தான் என்று இருப்பவள் அவள்.

அவளே அன்னை.....

நாம் மனிதர்களா?

நாம் மனிதர்களா?

அலைபேசி என்றோம்,
சிட்டுக்குருவியியை இழந்தோம்.
வளர்ச்சிக்கான சாலைகள் என்றோம்,
மரங்களை இழந்தோம்.
நதிகள் மிகுந்த நாடு என்றோம்,
தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கிறோம்.
வளங்கள் நிறைந்த நாடு என்றோம்,
வாழ வழிஇன்றி இருக்கிறோம்.
ஒற்றுமையானவர்கள் என்றோம்,
வேற்றுமைஇல் கிடக்கிறோம்.

சிந்தித்து கூறுங்கள்,
நாம் மனிதர்களா?

தேர்வு அறைகளில்















உன் நினைவுகள் தான் என் நினைவுகளில் எப்போதும்..... 

உன்னை மட்டுமே நாள் முழுவதும் சுமந்து கொண்டு திரிகிறேன்.... 

என் ஆவி தீரும் அளவுக்கு உன்னை தெரிந்து கொண்டேன்.... 

கல்லூரிக்கு சென்றாலும் உன் ஞாபகமே என்னுள்.... 

இத்தனை விஷயங்கள் செய்தேன் உனக்காக.... 

ஏன்! நீ மட்டும் என் நினைவுகளில் இல்லாமல் மறைந்து போகிறாய் 

என் தேர்வு அறைகளில் இருந்து மட்டும் .....

கல்லுரி வகுப்பறையில்







கண் இமை மூடி கனவு உலகத்திற்கு சென்றாலும், 

உடல் மட்டும் கவனித்திருக்கும்....  

சில நேரம் தூக்கம் கூட  எட்டி பார்க்க பயப்படும் ,

கேள்வி கணை எப்போது எழும்பும் என்ற பயத்தில்..... 

ஒரு உருண்டை தொண்டைக்கும் வயிற்ருக்கும் இடையில் உருளும்,

கேள்விக்கு பதில் தெரியாத போது....... 

மீண்டும் வருவேன் என்று இறுமாப்புடன் ,

சொல்லி செல்லும் மணி ஓசையும் ஆசிரியரும்.......
                                                                                           - விமலா


முதல் நாள்



கல்லூரியின் முதல் நாள்,
விடுதி வாழ்க்கை,
அலைபாயும் மனம்,
தோழியின் தோளை தேடி.
   -சுபாஷினி

முடியுமா தேர்வு நேரம்

தேர்வு நேரம்,
உறக்கம் இழக்கும் நேரம்.

தேர்வு நேரம்,
தலைவலி தொடங்கும் நேரம்.

தேர்வு நேரம்,
பதற்றம்  நிலவும் நேரம்.

தேர்வு நேரம்,
கவலை ஏற்படும் நேரம்,

தேர்வு நேரம்,
அறிவு தேவைப்படும் நேரம்.

தேர்வு நேரம்
நம்பிக்கை இழக்கும் நேரம்.

தொடங்கிவிட்டது தேர்வு நேரம்,
எங்களுக்கோ தேர்வு நேரம் முடிந்தால் தான் சுதந்திரம்.
முடியுமா தேர்வு நேரம்?....

சாலையோர தலைவர்கள் சிலை







அன்றோ விடுதலைக்காக போராடிய தலைவர்களுக்கு,
இன்றோ சிறை தண்டனை.
       சாலையோர தலைவர்கள் சிலை
-சுபாஷினி

நேசம்




நீ உன்னை மட்டும் நேசிக்கதே 
இருக்கும் போதே செத்து கொண்டிருப்பாய்..........
பிறரையும் நேசித்து பார் இறந்தாலும் 
வாழ்ந்து கொண்டிருப்பாய்
          அவர்கள் இதயத்தில்.......

கவிதைக்கு கவிதை

       



       


   கவிதைக்கு கவிதை


இரண்டு வரியிலும் அர்த்தம் சொல்வேன்..
இரண்டெழுத்திலும் அர்த்தம் சொல்வேன் என்று
இறுமாப்புடன் சிரிக்கின்றது கவிதை.

-சுபாஷினி






கல்லூரி வாழ்க்கை

கல்லூரி வாழ்க்கை


அழகிய வாழ்க்கை,
என் கல்லூரி வாழ்க்கை.

வகுப்பில் ஏற்படும் சிறு சிறு சண்டைகள்,
அதை மறக்க கேண்டீன் இல் வைக்கும் ட்ரீட்கள்,
அழகை பார்க்கத் தவம் கிடந்த கல்லூரிப் படிகள்,
ஆசிரியரிடம் ஏராளமாக வாங்கிய திட்டுகள்,

அழகிய வாழ்க்கை,
என் கல்லூரி வாழ்க்கை.

உரிமையோடு பழகிய நண்பர்கள்,
துன்பத்தை மறக்கச் செய்த சகாக்கள்,
நெஞ்சை நெகிழ வைத்த தருணங்கள்,

மறக்க முடியாத வாழ்க்கை,
அழகிய வாழ்க்கை,
என் கல்லூரி வாழ்க்கை.

அழுதேன்,   துடித்தேன்,
கதறினேன்,  வருந்தினேன்,
பிரிவைக்கண்டு......
இன்றுடன் முடிந்தது,
என் வாழ்க்கை,
என் (கல்லூரி) வாழ்க்கை.

தலைநிமிரும் காலம்

         

          தமிழனே தலைகுணிந்தது போதும்,
             தலைநிமிரும் தருணம்
              தமிழ்த்தாகம் உதயம்..

என் தோழி


"வண்ணங்கள் தேவையில்லை தோழி....
 உன் புன்னைகை கொடு போதும்,
                                        என் பூக்களும் புன்னைகைக்கும்...


வசந்த காலம் தேவையில்லை தோழி....
உன் விழி பார்வை ஒன்றே போதும், 
என் மரங்களும் துளிர் விடும்.... 


கவிதைகள் வேண்டாம் பெண்ணே....
உன் ஒரு வரி வார்த்தைகள் போதும்,
வார்த்தைகளுக்கும் உயிர் பிறக்கும்...


உன் அருகாமை ஒன்று போதும்,
உலகமே அழகாகி போகுமே...."

நினைவுகளின் கதை



 நம் நினைவில் நின்ற நினைவுகளை கதையாக எழுதினேன்
 அது கவிதையாக முடிந்தது கண்ணே.....
கவிஞன்   கூட இப்படி தான் கவிதை எழுதிருபனோ  !.. 
                                                                                                                           - விமலா

அம்மாவின் தியாகம்




முதல் உணவாக தன் இரத்தத்தையே கொடுத்தவள்......
மரபு சூட்டின் இடையில் தூங்க இடம்   கொடுத்தவள்.....
பொன் பாதம் தரையில் ஊன்றி நடக்க கற்று கொடுத்தவள்......
முதல் வார்த்தை பேச கற்று கொடுத்தவள்......
இந்த தியாகியின் பெயர் தான் அம்மா

வெற்றி




" கனவினில் வரும் கற்பனைகளை விரும்புவதை விட,
நிஜங்களில் வரும் நிஜங்களை விரும்பி பார்....
வெற்றி உன்னை விரும்பி உன் பின்னே வரும்...."

காதல் தோல்வி



துறவியும் நானும் ஒன்றுதான் 
அவன் எல்லாவற்றையும் 
துறந்து நிற்கிறான்.....
நான் எல்லாவுமாகிய உன்னை
பிரிந்து நிற்கிறேன்.....

கவிதையின் கவிதை



ஒரு வரியிலும் கவிதை சொல்லலாம்.....
ஒரு வார்த்தையிலும் கவிதை சொல்லலாம்....
-கவிதை

அம்மா



" என்னை பத்து மாதம் கைதியாக வைத்தபோது 
கலங்காத உன் கண்கள்......
            என்னை விடுவிக்கும் போது மட்டும் ஏன் கலங்கின "......